Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்மநாபசுவாமியை வழிபட பாடகர் யேசுதாஸ் விருப்பம்

பின்னணிப் பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான யேசுதாஸ், பிறப்பால் கிறிஸ்தவர். ஆனால், இந்து மத நம்பிக்கைகள்மீது மரியாதையும், இந்து மதக் கடவுள்களை வணங்குவதிலும் ஆர்வமும் கொண்டவர். யேசுதாஸ் பாடிய ஐயப்பன் பாடல்கள், மிகவும் பிரபலம்.

ஜேசுதாஸ்


சில குறிப்பிட்ட இந்துக் கோயில்களில், மற்ற மதத்தினர் சென்று வழிபட அனுமதி கிடையாது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பாடகர் யேசுதாஸ், மதமாச்சரியங்களைக் கடந்து இந்துக் கடவுள்கள்மீது பக்திகொண்டவர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அவர் மனமுருக தரிசனம் மேற்கொண்டது உண்டு. தற்போது, கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம்செய்ய அவர் ஆர்வமுடன் உள்ளார். 

எனவே, தனது விருப்பத்தை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தும் விதமாக ஓர் அனுமதிக் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்துமதம்குறித்து தான் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம்குறித்தும், பத்மநாபசுவாமியைத் தரிசிக்கும் தனது ஆவல்குறித்தும் விளக்கமாக எழுதியுள்ளார். மேலும், பத்மநாபசுவாமியைத் தரிசனம்செய்ய, தனக்கு அனுமதி அளிக்குமாறும் கோரியுள்ளார்.

யேசுதாஸின் இந்தக் கடிதத்துக்குப் பதில் அளிக்கும் விதமாக, கோயில் நிர்வாகத்தினர் இசைவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்துப் பேசிய கோயில் நிர்வாகிகள், ''இந்து மதத்தின்பால் நம்பிக்கைகொண்ட எவரும் சாமியைத் தரிசனம் செய்வதில் தடையேதும் இல்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளனர். 
விரைவில், பத்மநாபசுவாமியைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு, பாடகர் யேசுதாஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close