Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று சென்னை வருகிறார் ஆளுநர்!

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை வருகிறார். 


அ.தி.மு.க.-வில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்ததால், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள், கடந்த மாதம் 22-ம் தேதியும், மூன்று எம்.எல்.ஏ-க்கள் செப்டம்பர் 6-ம் தேதியும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தி.மு.க தரப்பில் ஆளுநரிடம் இரண்டு முறை வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து சென்னைக்கு செப்டம்பர் 18-ம் தேதி வர இருப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட நீதிமன்றம், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 20-ம் தேதி வரை தடை விதித்து, இதுதொடர்பாக விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close