Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சித் தேர்தல் தேதி: மீண்டும் இழுத்தடிக்கும் தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

election commision
 

கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று  தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டுவந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்று கூறி, மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
 
இந்த வழக்கை, கடந்த 4-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைவதால், உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
  
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்துள்ளது. ’1996ல் பிரிக்கப்பட்ட வார்டு வரைமுறைப்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டுமா என்பதில் குழப்பம் உள்ளதாகவும், இதை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close