Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக அரியலூர் மாறும்'- கலெக்டர் உறுதி

'டிசம்பர் 31-ம் தேதிக்குள், திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக அரியலூர் மாறும்' என்று மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூய்மைகுறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மை சேவை ரதம், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில், தூய்மையை வலியுறுத்தும் தூய்மை சேவை ரதத்தை, அரியலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி பிரியா மற்றும் அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும், துப்புறவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான உபகரணங்கள் வழங்கப்பட்டன. தூய்மையை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு துண்டுப்பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ஆட்சியர் லட்சுமி பிரியா பேசியபோது, ''அரியலூர் மாவட்டத்தை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள், திறந்தவெளிக் கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கான விழிப்பு உணர்வு, 'தூய்மை சேவை விழிப்புணர்வு' ரதத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ரதம், வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று, சுகாதாரமான அரியலூர் மாவட்டத்தை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கம், அதன் பயன்கள், கழிவறையைப் பயன்படுத்தவேண்டியதன் அவசியம், அதற்கான அரசின் திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவைகுறித்து பொதுமக்களுக்கு  விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பேசிய அரசின் தலைமைக் கொறடா, ''நம் மாவட்டத்தை திறந்தவெளிக் கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்ற அரசு திறம்படச் செயல்பட்டுவருகிறது. இதற்கு நானும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் வாருங்கள்'' என்று முடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close