Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செல்லுமா? என்ன சொல்கிறார் சேடப்பட்டி முத்தையா

sedapatti muthiah

ஆளும்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமா என்பதுகுறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா பதில் அளித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆளும்கட்சியைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித் தனியாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, "கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்று 18 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு முதலில், 18 பேரும் விளக்கம் அளித்தனர். பின்னர் விளக்கம் திருப்தியில்லை என்று கூறி சபாநாயகர் தனபால், மீண்டும் 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு 18 பேரும் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்செய்யப்பட்டது குறித்து, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறுகையில், 10-வது அட்டவணையின்படி ஏ பிரிவின் கீழ் கட்சித் தாவியதாகக் கூறி 18 எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். 6-வது விதியின் உட்பிரிவு 5-ன் கீழ், கட்சியை விட்டு வெளியேறியதற்கான ஆவணம் எங்கே? அனுமதி பெறாமல் ஆளுநரிடம் கடிதம் அளித்ததால் விதிமீறல் எனக் கொறடா கூறியிருந்தார். ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை ஆதாரமாக இணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக்குள்  தனி அணியாகச் செயல்பட்டால் மட்டுமே கொறடாவால் நடவடிக்கை எடுக்க முடியும். அதுவும் அரசுக் கொறடாவின் உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லாது. சட்டவரம்புக்கு உட்படாத நடவடிக்கையை சபாநாயகர் செய்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்றுகூட நீதிமன்றம் செல்லலாம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close