Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாளை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்க விவகாரம், தமிழக அரசியல் சூழலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்த்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை, தி.மு.க தொடர்ந்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்குடன் சேர்த்து விசாரிக்கவும் எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இந்தக் கடிதத்தைச் சுட்டிக்காட்டி, சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக  இரண்டு முறை கடிதம் அளித்தது. ஆனால்,  நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறி, தி.மு.க. சார்பில் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. 

இந்தச் சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களுடன் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மாலை நடைபெறும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. சட்டப்பேரவைத் தொடர், பேரவை குட்கா விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close