Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'படிக்க இடம் கொடுங்கள்!’ - அரசுப் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் கோரிக்கை

அரசுப் போட்டித்தேர்வுக்காகத் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கப் போதிய வசதி இல்லாத மாணவர்கள் மதுரை கார்ப்பரேஷன், காந்தி மியூசியம், மாநகராட்சிப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குழுவாகச் சேர்ந்து படித்துவருகின்றனர். இந்நிலையில் காந்தி மியூசியம், தமுக்கம் உள்ளிட்ட இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடியதால் காந்தி மியூசியத்தில் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அப்பகுதியில் போராட்டங்கள் முடிவு பெற்ற நிலையிலும் மாணவர்கள் படிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், மேலும் அங்கு படிக்க வரும் மாணவர்கள் யாரும் போராட்டங்களில் குதிப்பதில்லை என்றும் தெரிவித்து, தாங்கள் காந்தி மியூசியம் வளாகத்தில் படிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  அதில், ’நீட் தேர்வுப் போராட்டத்தைக் காரணம் காட்டி கடந்த 4-ம் தேதி முதல் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கிராமப்புறத்தில் வரும் நாங்கள் காந்தி மீயூசியத்தில் உள்ள காலியான இடங்களில் படித்துவருகிறோம். ஆனால், எந்தவித போராட்டங்களும் நாங்கள் நடத்துவது கிடையாது. நாங்கள் முழுக்க முழுக்க போட்டித் தேர்வுக்காகப் படிக்க வருபவர்கள். எனவே, நாங்கள் காந்தி மீயூசியத்தில் படிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close