Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீர் பிரச்னை: களத்தில் இறங்கிப் போராடிய தி.மு.க எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஸ்டார் அந்தஸ்து உள்ள தொகுதி கன்னியாகுமரி. கடந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரத்தை எதிர்த்து, தி.மு.க-வின் ஆஸ்டின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் தினந்தோறும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் போன்று ஆஸ்டின் எம்.எல்.ஏ-வும் கன்னியாகுமரி தொகுதியின் சுற்றுப் பயணம் செய்து மக்கள் குறைகளைக் கேட்டு, பல நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார். பள்ளிக் கூடங்களிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆஸ்டின் அரசியலில் நுழைந்தது முதல் குமரி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று வருகிறார். தனது தொகுதி அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டங்களையும், உள்ளிருப்புப் போராட்டங்களையும் அடிக்கடி செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் .

மக்கள் குறைகளைக் கேட்டுச் செல்கையில், குமரிமாவட்டத்தின் கடைவரம்புப் பகுதி குளங்களில் தண்ணீர் வரவில்லை என ஆஸ்டின் எம்.எல்.ஏ-விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் கடை வரம்புப் பகுதிகளில் உள்ள குளங்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார் ஆஸ்டின். ஆனால், இதுவரை தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதற்காக அஞ்சுகிராமம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாகவும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று அஞ்சுகிராமம் சந்திப்பில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க-வினர் கடை வரம்புப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடும் கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் பாபு ஆகியோர் அஞ்சுகிராமம் சென்று ஆஸ்டின் எம்.எல் ஏ-வுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது கடை வரம்புப் பகுதி குளங்களுக்குத் தண்ணீர்விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிமொழி கொடுத்தனர். உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்டின் எம்.எல் ஏ. தலைமையிலான தி.மு.க-வினர் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். விரைவில் தண்ணீர் வராவிட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஈடுபடப் போவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அஞ்சுகிராமம் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close