Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் கனமழை: பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. 

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது. 

சென்னையில், பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. பலர், அலுவலகம் முடித்து வீடு செல்லும் நேரம் என்பதால், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. 

கூடவே மாலை முதல் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதனால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழைபெய்தது.  தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை தேனி, நீலகிரியில்  கனமழை பெய்தது. 

இன்னும் மூன்று நாள்கள் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: வீ. நாகமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close