Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு விழிப்புஉணர்வுக்  கூட்டம்

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண்ணுடன் ஆதார் எண்ணைச் சேர்ப்பது, பணி ஒய்வுபெறும் நாள் அன்று  ஓய்வூதியப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள்குறித்து ஊழியர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் சார்பில் விழிப்புஉணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் வர்கீஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் பலனைப் பெறுவதற்காக வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வீட்டு வசதித் திட்டம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் குறைவாக இருந்து, குடும்ப உறுப்பினர் பெயரில் இந்தியாவில் எங்கும் வீடு இல்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு, மானியத்துடன் இணைந்த கடன் திட்டத்தின்படி வட்டிக்கான மானியமாக 2.20 லட்சம் வரை பெற முடியும். தற்போது, வருங்கால வைப்புநிதி செலுத்துவதன்மூலம் ஏற்படும் நன்மைகள்குறித்து, தமிழகம் முழுவதும் அனைத்து ஊழியர்களுக்கும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில், வருங்கால வைப்புநிதி வைக்கத் தவறும் நிறுவனங்களைக் கண்டறிந்து, முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுவருகிறது. அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close