Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 நாள் வேலைத் திட்டத்தை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்தை, பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 24 மணி நேர தொடர் கவனஈர்ப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்  நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் 24 மணி நேர தொடர் கவனஈர்ப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார்கள்.

100 நாள் வேலைத் திட்ட  தொழிலாளர்களுக்கு, அரசு அறிவித்துள்ள தினக்கூலி ரூ.205 என்பதை முழுமையாக வழங்க வேண்டும், வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் 100 நாளை 150 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும், சம்பளத்தை படிப்படியாக ரூ. 400 ஆக உயர்த்த வேண்டும், தொழிலாளர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், நிபந்தனையற்ற முதியோர் பென்சன் வழங்க வேண்டும், வறுமைக்கோடு பட்டியலைத் திருத்தி, ஏழை மக்களை இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை அகில இந்திய விவசாய சங்கத்தினர் நடத்தினார்கள். இதில், முன்னாள் எம்.பி., பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ., லீமாரோஸ் போன்றவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். போராட்டத்தின்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை  போராட்டக்காரர்கள் குமரிமாவட்ட ஆட்சித் தலைவர் சஜ்ஜன் சிங் சவானிடம் அளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close