Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன், செந்திலைக் கைதுசெய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ttv dinakaran- Senthil

டி.டி.வி.தினகரன் மற்றும் நடிகர் செந்திலை அக்டோபர் 4-ம் தேதி வரை கைதுசெய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட நடிகர் செந்தில், சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, முதல்வர் பழனிசாமி அணியை சேர்ந்த திருச்சி எம்.பி குமாரை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருணிடம் புகார் அளித்தார். அதில், டி.டி.வி.தினகரன் தூண்டுதல் பெயரில் நடிகர் செந்தில், தன்னை மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில், டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் ஆகியோர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல்
விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வந்தது.

இதனிடையே வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படும் சம்பவம் சென்னையில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்வதற்கு அதிகாரமில்லை. முதல் கட்ட விசாரணை நடத்தாமலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் விரோதம் காரணமாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வீரா கதிரவன், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பேசியதற்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்" என்றுக்கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தினகரன் மற்றும் செந்திலை அக்டோபர் 4-ம் தேதி வரையும், எம்.பி குமாரின் புகார் அடிப்படையில் பதிவான வழக்கை விசாரிக்கவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close