Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி... இஸ்ரேலுடன் சீனா ஒப்பந்தம்! #LabGrownMeat

சீனா


சீனா, இஸ்ரேலுடன் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி, மூன்று நிறுவனங்களால் (SuperMeat, Future Meat Technologies, and Meat the Future) தயாரிக்கப்படும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இறைச்சியை (Lab grown meat) சீனாவில் இறக்குமதிசெய்ய இந்த ஒப்பந்தம் உதவும். இது, சீனாவின் தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
 
இஸ்ரேலுக்கான கண்டுபிடிப்பு ஆணையம் மற்றும் இஸ்ரேல் ஏற்றுமதி நிறுவனம் ஆகியவை, சீனாவுடன் ஒப்பந்தத்தை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன. ஆரம்ப கால ஆய்வக மாமிச மாநாட்டில், இரு அமைப்புகளும் கலந்துகொண்டன. கடந்த மே மாதம் ஹைஃபா, இஸ்ரேலில் இந்த மாநாடு நடந்தது.

இஸ்ரேல், ’ஆய்வக இறைச்சி’ உற்பத்தியில் பெரிய டான் ஆக உருவாகிவருகிறது. அமெரிக்காவிலும் இதுதொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. Memphis Meats என்னும் நிறுவனம் சமீபத்தில் பில் கேட்ஸ் போன்ற பெரிய தொழிலதிபர்களிடமி  ருந்து முதலீடுகளைப் பெற்றது, Hampton Creek என்னும் ஆய்வக இறைச்சி, அதன் தயாரிப்புகளை வணிகரீதியாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்க உள்ளது.
 
ஆய்வக வளர்ச்சியடைந்த இறைச்சி, குறிப்பிட்ட வகை விலங்குசெல்களைப் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்படுகிறது. இது,உணவுக்காக கொல்லப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close