Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனிதஉரிமைப் புகார்கள் : ஐ.நா-வின்  மீளாய்வுக் கூட்டத்தில் பதில் சொல்கிறது இந்தியா!

ஐ.நா-வின் மனித உரிமைக் கவுன்சில் மூலம் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலைகுறித்து ஆய்வுசெய்யும் நோக்கில், கடந்த  2006-ம் ஆண்டு, ஐநாவின் 'உலகளாவிய காலமுறை மீளாய்வு' உருவாக்கப்பட்டது. இதில், ஐக்கிய நாடுகள் அவையில் அங்கம் வகிக்கும்  193  நாடுகள் இடம்பெற்றுள்ளன.  உலக நாடுகளில் காணப்படும் மனிதஉரிமை நிலைகுறித்து, நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய காலமுறை மீளாய்வு நடைபெறுகிறது.

மூன்றாவது உலகளாவிய காலமுறை மீளாய்வு, கடந்த மே 4-ம் தேதி  நடைபெற்றது. இதில், இந்தியாவில் காணப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து 250 கேள்விகளையும் பரிந்துரைகளையும் 41 நாடுகள் முன்வைத்துள்ளன. இந்நிலையில், வரும் 21-ம் தேதி, உலகளாவிய காலமுறை மீளாய்வு தொடர்பான  ஐ.நா-வின் பொதுக் கவுன்சில், ஜெனிவாவில் கூடுகிறது. அதில், ஏற்கெனவே கேட்கப்பட்ட 250 கேள்விகளுக்கும் பரிந்துரைகளுக்கும் இந்தியா பதிலளிக்க உள்ளது. இந்நிகழ்ச்சி, நேரலையாக மனிதஉரிமைக் காப்பாளர்களின் கருத்துரையோடு, வரும் 21-ம் தேதி மாலை  ஒளிபரப்பாகிறது. இதில், மதுரை மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், பொதுக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியை, மதுரை மக்கள் நேரலையில் காணும் வகையில், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close