Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிதா வீட்டுக்குச் செல்கிறார் தீபா!

மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை அரியலூர் செல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை தீபா ஆதரவாளர்கள் செய்துவருகின்றனர்.

நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. அனிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சினிமா பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலி முடிந்த சில நாள்களுக்குப் பிறகு, நடிகர் விஜய் ரகசியமாக அனிதா வீட்டுக்குச் சென்று அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் அனிதா குடும்பத்தினருக்கு நிதியுதவியும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் அனிதா இறந்து 17 நாள்களுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை அரியலூர் சென்று அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். தீபாவின் வருகை குறித்த தகவல் அனிதாவின் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீபா அணியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல தீபா நாளை அரியலூர் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபா, அவர் கணவர் மாதவன் இருவரும் சேர்ந்து, அனிதா வீட்டுக்குச் செல்கின்றனர். நிதியுதவியும் அளிக்கப்படவுள்ளது" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close