Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி எம்.பி.பி.எஸ் மாணவர்கள் நீக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முறைகேடாக சேர்க்கப்பட்டதாகச் சொல்லி 778 மாணவர்களை அதிரடியாக வெளியேற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2016-17 ஆண்டு விதிமுறைகளை மீறி நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கையை நடத்தியிருப்பதாக மாணவர்-பெற்றோர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதியும் சேர்க்கைக்குழுத் தலைவருமான சித்ரா வெங்கட்ராமன், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனியார்க் கல்லூரி நிர்வாகங்கள் முறைகேடு செய்திருப்பதாக அளித்த புகாரின் பேரில் 778 மாணவர்களை அதிரடியாக வெளியேற்ற உத்தரவிட்டது எம்.சி.ஐ.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களில் 108 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, “விதிமுறைகளை மீறி நாங்கள் கல்லூரிகளில் சேரவில்லை. நிர்வாக ரீதியில் மீறப்பட்ட விதிமுறைகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஓர் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இரண்டாம் ஆண்டைத் தொடங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில் எங்களை வெளியேற்றினால் எங்களின் இரண்டு ஆண்டு கல்வியும் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே, எம்.சி.ஐ-யின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்” என்று வழக்கைத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எம்.சி.ஐ-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரம் குறித்து வரும் 23-ம் தேதிக்குள் இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close