Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவருக்கும் இவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில், 15 நாள்களுக்கு முன்பு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மணிமேகலைக்கு ஏற்கெனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை இவர் கூடவே மருத்துவமனையில் இருந்து வந்தது.
மருத்துவமனையில் உதவி செய்ய கணவரும் உறவினர்களும் இவருக்கு இல்லாததால் மருத்துவமனை ஊழியர் சுபத்ரா தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார். இதனால், சுபத்ராவுக்கும் மணிமேகலைக்கும் நட்பு அதிகரித்துள்ளது. ஒருவருக்கொருவர் குடும்ப விஷயங்களைப் பறிமாறிக்கொண்டார்கள். மணிமேகலை, 'இந்த முதல் பிள்ளையே என்னால் வளர்க்க முடியவில்லை. இரண்டாவது குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறேன்'' என்று கூறியுள்ளார். உடனே சுபத்ரா, ''சேலத்தைச் சேர்ந்த உன் பெயரைக் கொண்ட வழக்கறிஞர் இருக்கிறார். அவரிடம் சொல்லியிருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று காலை சேலத்தைச் சேர்ந்த மணிமேகலை குழந்தையின் தாயிடம் தேவையான பணத்தைக் கொடுக்கிறேன். குழந்தையை என்னிடம் கொடுத்து விடு என்று கூறியிருக்கிறார். ஆனால், குழந்தையைத் தர மறுத்துவிட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்தால் மருத்துவமனையில் வேலைக்கு எடுத்துக்கொள்ளுவார்கள் என்று கூறி காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குழந்தையின் தாய் மணிமேகலையும் அவரின் முதல் குழந்தையும் மருத்துவமனைக்குள் சென்ற பிறகு, சேலத்தைச் சேர்ந்த மணிமேகலை குழந்தையைக் காரில் கடத்தி வந்துவிட்டார். இதையடுத்து, சென்னைப் பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து சேலம் விரைந்து வந்தார்கள்.

இத்தகவல் சேலம் கமிஷனரிடம் தெரிவிக்க, இந்தத் தனிப்படைக்கு உதவியாக அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணனைப் பரிந்துரை செய்துள்ளார். கண்ணன் விரைந்து விசாரணையை மேற்கொண்டு, மதியம் குகை ஆற்றங்கரை வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், மணிமேகலை வீட்டில் பெண் குழந்தை இருப்பது தெரிந்து மீட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close