Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’தினகரனை நம்பியதில் 18 எம்.எல்.ஏ-க்கள் பதவி இழந்ததுதான் மிச்சம்’’ -அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கு

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பில் நடந்த அண்ணா  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அவர் வழியிலேயே தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சமீபத்தில் நாங்கள் கூட்டப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் 113 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். 98 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் அணிப்பக்கம் தான்  உள்ளனர். எங்கள் அணியில் ஸ்லீப்பர் செல்களாக 12 எம்.எல்.ஏ-க்கள் உள்ளதாக தினகரன் கூறி வருகிறார். எங்கள் அணியில் ஸ்லீப்பர் செல்கள் என யாரும் இல்லை. 

kamboor raju speech

தினகரனை நம்பி அவரது பேச்சைக் கேட்டு செயல்பட்டதால் 18 எம்.எல்.ஏ-க்களுமே தங்களது பதவியை தற்போது இழந்து நிற்பதுதான் மிச்சம். ஒரு கட்சியின் கீழ் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் வேறொரு தலைமையை ஆதரிக்கக்கூடாது. அப்படி ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களை கொறடாவின் அறிவிப்பு படி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யலாம் என்பது சட்டப்பேரவை மரபு. இதை சபாநாயகர் செய்ததில்  என்ன தவறு? இது புதிதல்ல, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படி தகுதி நீக்கம் நடந்துள்ளது. சபாநாயகரின் 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க உத்தரவு சட்டபூர்வமானதுதான்.  அவரது நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து கருத்துச் சொல்ல ஸ்டாலினுக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும்  எங்கள் அணியின் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடருவோம். இரட்டை இலைச் சின்னத்தையும் விரைவில் மீட்டெடுத்து அடுத்து வர இருக்கும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close