Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாலிவுட்டில் கால் பதிக்கிறாரா ராணா டகுபதி?

பாகுபலியின் பல்வால் தேவன் கதாபாத்திரம் மூலம், பலர் மனதைக் கவர்ந்தவர் ராணா டகுபதி. தற்பொழுது ஹாலிவுட்டிலும் கலக்கலாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். நவம்பர் 8, 1888ல் ஏற்பட்ட புயல் காரணமாக 'விஜில்' என்ற கப்பல், 700-க்கும் மேலான பயணிகளோடு சௌராஷ்ட்ரா கடற்பகுதியில், மர்மமான முறையில் காணாமல் போனது. இதை மையமாக வைத்து, த்வானி மேதா இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் 'விஜில்: தி மிஸ்ட்ரி ஆஃப் தி ஃபான்டம் ஷிப்' (The Mystery Of The Phantom Ship). இந்த மர்மத்துக்குப் பின்னால் என்ன இருக்கிறது? என்று கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக ராணா நடிக்கவுள்ளார்.

ராணா டகுபதி

ராணாவுக்கு கதைத் தளம் பிடித்துப் போய் லண்டனில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாலான டயலாக்குகள் ஆங்கிலத்தில் இடம்பெறும். கதைக்கு ஏற்ற இடங்களைத் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. லண்டனில் இருக்கும் ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. அடுத்த வருடம் பாதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close