Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் டு தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர்! சபாநாயகர் தனபால் ரீவைண்ட்

ளும் எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றும் நோக்கில், டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகுதிநீக்க நடவடிக்கையை எடுத்த சபாநாயகர் தனபால், 29 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சபாநாயகர் தனபால்

1987-ம் ஆண்டு, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது. இதைத் தொடர்ந்து, 1988-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. கலவரமாக மாறிய வாக்கெடுப்பு நிகழ்ச்சியில், ஜானகி வெற்றிபெற்றதாக அறிவித்தார் அன்றைய சபாநாயகர் பிஹெச்.பாண்டியன். மேலும், 33 சட்டமன்ற உறுப்பினர்களையும் பாண்டியன் தகுதிநீக்கம் செய்தார். அந்த 33 எம்.எல்.ஏ-க்களில், இன்றைய சபாநாயகர் தனபாலும் ஒருவர். பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் இருந்த தனபால், தற்போது எடப்பாடி பழனிசாமி அணியின் ஆதரவாளராக இருக்கிறார். தற்போது, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையத்துக்கு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தரவை தேர்தல் ஆணையம் ஏற்குமா? அல்லது சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் தடைசெய்யுமா? இந்தக் கேள்விகளுக்கான விடை, அடுத்தடுத்த நாள்களில் தெரியவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close