Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்ஸிகோவில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

மெக்ஸிகோவின் பியூப்லா நகரில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு, 7.1 ரிக்டர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள ஏராளமான வீடுகள், தேவாலயங்கள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகும் வீடியோக்களை பியூப்லா கவர்னர் டோனி கலில் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், அலுவலகங்கள், வீடுகளை விட்டு வெளியேறி, பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்திக்கொண்டனர். இதனால், மெக்ஸிகோ நகரில் பதற்றம் நிலவுகிறது. மக்கள், பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைகின்றனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. 

மெக்ஸிகோ நிலநடுக்கம்

நிலநடுக்கம் ஏற்படப்போகும் முன், அங்குள்ள மார்க்கெட்டில் எரிவாயுக் கசிவை உணர்ந்த மார்க்கெட் தொழிலாளி ஒருவர், அங்கு இருக்கும் யாரையும் புகைபிடிக்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார். பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுவதை டிவிட்டர் பக்கத்தில் மக்கள் பதிவிட்டுவருகின்றனர். இதேபோல, 1985-ல் 8.1 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில், ரோமாவின் அண்டைப் பகுதி கடுமையாக சேதப்பட்டு, 1000-க்கும் மேலானோர் பலியாகினர். இரண்டாவது முறையாக, மெக்ஸிகோவை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில்  ஏற்பட்ட உயிரிழப்புகுறித்து எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close