Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்சூரன்ஸ் தொகையில் முறைகேடு; சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், நிவாரணத்தொகை கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர் 

இன்சூரன்ஸ்


டெல்டா பகுதியில், கடந்த ஒராண்டுக்கும் மேலாக காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால், சம்பா சாகுபடியை நம்பியிருந்த நிலையில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகின. நிவாரணத்துக்காக, பெரும்பாலான விவசாயிகள் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தனர். பயிர்கள் கருகிய நிலையில், விவசாயிகள் சிலர் தற்கொலைசெய்துகொண்டனர். அரசு அறிவித்த இன்சூரன்ஸ் தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இன்சூரன்ஸ் தொகை வந்தும் இன்னும் வழங்காமல் இழுத்தடித்துவந்தது. மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், தஞ்சை மாவட்டம் மெலட்டூர், அன்னப்பன்பேட்டை, இரும்புதலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் வழங்காததைக் கண்டித்து, மெலட்டூர் நான்குரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

விவசாயி கோவிந்தராஜ், ’நாங்களும் இந்தா வரும், அந்தா வரும்'னு எதிர்பார்த்திருந்தோம். மற்ற பகுதிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கொடுத்துவிட்டார்கள். எங்களுக்கு இன்னும் கொடுக்காதது ஏன்? ஏதோ முறைகேடு நடப்பதாகத் தெரிகிறது’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close