Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் தொடர் மழையால் நிரம்பிய பாசனக் குளங்கள்

குமரி மாவட்டத்தில், கடந்த மூன்று வாரமாக விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. மயிலாடி, கன்னிமார், கொட்டாரம், பூதப்பாண்டி , அடையாமடைப் பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துவருகிறது. ஆரல்வாய்மொழி, தோவாளை, கீரிப்பாறை, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில், சாரல்மழை பெய்துவருகிறது. நாகர்கோவிலில், மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.  குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், ஆறுகளிலும் சானல்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் சாரல்மழை பெய்துவருகிறது. மலைப் பகுதிகளான பாலமோரில், கணிசமான அளவு மழை பெய்துவருகிறது. இதனால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொடுக்கும் முக்கடல் அணையின் நீர் மட்டம் 4 அடியை எட்டிவிட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 21.70 அடியிலிருந்து உயர்ந்துவருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 46.20 அடியிலிருந்து மேலும் உயர்ந்துவருகிறது. 993 கன அடி தண்ணீர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 481 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் தோவாளை, அனந்தனாறு, நாஞ்சில்நாடு சானல்களில் விடப்பட்டுள்ளது.

இதனால் பாசனக் குளங்கள் வேகமாக நிரம்பிவருகின்றன. மாவட்டம்  முழுவதும் 2,040 பாசனக் குளங்கள் உள்ளன. தற்போது 130 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டிவிட்டன. 335 குளங்கள் 75 சதவிகிதமும், 279 குளங்கள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. 1237 குளங்கள் 25 சதவிகிதம் நிரம்பியுள்ளது. இதனால், குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close