Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளி மாணவனிடம் தவறாக நடக்க முயற்சி; விசாரணைக்கு வந்த தலைமையாசிரியர் தப்பி ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் தவறாக நடக்க முயன்ற  தலைமை ஆசிரியரால், மாணவனின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையான பனச்சமூடு பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் அருள். இவர், நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு என்பவரது மகன் சபரி ஆனந்த் 5 -ம் வகுப்பு படித்துவருகிறான். தலைமை ஆசிரியர், மாணவனிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல இருந்துவந்துள்ளான்.

அதைத்தொடர்ந்து, பெற்றோர்கள் அவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அப்போது, பள்ளியில் நடந்தவற்றை மாணவன், மருத்துவர்களிடம் கூறியுள்ளான், இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பள்ளியில் பல மாணவ, மாணவியர்களுக்கு இதுபோன்று தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுத்துவந்துள்ளதாகவும், இவர்மீது காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல அதிகாரிகளிடமும் ஏற்கெனவே பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே, போலீஸார் தலைமை ஆசிரியரை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், அங்கு வந்த தலைமை ஆசிரியர், திடீரெனத் தப்பி ஓடிவிட்டார். தனது மகனின் மனநிலை மாறக் காரணமான தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பெற்றோர் காவல் நிலையத்திலேயே நள்ளிரவு வரை இருந்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close