Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னறிவிப்பு இன்றி அணையைத் திறந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குமரி அணையில், முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிட்டதால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தால், தங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் நீர்நிலைகள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களைத் தூர் வார விவசாயிகள் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இன்றுவரை விவசாயத்துக்கு பயன்படும் கால்வாய்களைத் தூர் வாரவில்லை. இந்நிலையில், நீர் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்துவருகின்றன. தற்போது பெய்த மழையால், நாகர்கோவிலை அடுத்த கோட்டாரில் உள்ள குமரி அணை நிரம்பி, நீர் வெளியேறியுள்ளது. இதனால், அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணை நீரைத் திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அந்தப் பகுதியில் விவசாயம் செய்திருந்த 20 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், வாழை மரங்கள்  நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close