Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி மாவட்டத்தில் களைகட்டும் கொலு பொம்மை விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில், நவராத்திரி கொண்டாட்ட ஏற்பாடுகள்  தொடங்கியுள்ளன. கொலுபொம்மைகள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, 10 நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதுபோல, இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் ஒன்பதாவது நாள், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாளும் வீடுகளில் கொலுவைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

முதல் மூன்று நாள்கள் துர்கையை வேண்டுவார்கள். அடுத்து மூன்று நாள் லட்சுமியை வேண்டுவார்கள், கடைசி மூன்று நாள்கள்  சரஸ்வதியை வேண்டி வழிபாடுசெய்வார்கள். பெண்கள், நவராத்திரியின்போது விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். அதனால், பெண்கள்  தங்கள் வசதிக்கு ஏற்றார்ப்போல வீடுகளில் கொலுபொம்மைகளை அலங்கரித்துப் பூஜை செய்கிறார்கள்.

தற்போது, குமரி மாவட்டத்தில்  நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கொலுபொம்மைகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன. ரோட்டோரங்களிலும் சிறுசிறு கடைகளிலும் விதவிதமான கொலுபொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய ரக பொம்மை 50 ரூபாயிலிருந்து பெரிய ரக பொம்மைகள் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பொம்மைகளைப் பொறுத்து விலைகளும் மாறுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close