Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்குக் கடத்தல்: 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை தினமும் கடத்தப்படுகிறது. இதுகுறித்து, உணவு கடத்தல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்களும் வருகின்றன. அவர்கள், பறக்கும்படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ரேஷன் அரிசி, பால் வண்டி, மீன் கூடைகள், ஆம்புலன்ஸ், காய்கறி வண்டிகள், பஸ் மற்றும் பயணிகள் ஆட்டோவின்மூலம் கேரளாவுக்குக் கடத்திச் செல்கின்றனர். இவற்றைத் தடுப்பதற்கு பல சோதனைச் சாவடிகள் மாநில எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறி கடத்தல்காரர்கள் உணவுப் பொருள்களைக் கடத்திச்சென்றுவிடுகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு கடத்தல் பிரிவு தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், கொல்லங்கோடு கிராத்தூர் பகுதியில் உணவு கடத்தல் தடுப்புப் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றது. சந்தேகமடைந்த அதிகாரிகள், ஆட்டோவைத் தடுத்தார்கள். ஆனால், ஆட்டோ நிற்காமல் சென்றது. அதைப்  பின்தொடர்ந்து  விரட்டிச் சென்று மடக்கினர். அப்போது, ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆட்டோவை சோதனை செய்ததில், ஏழு மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது.

ஆட்டோவைப் பறிமுதல்செய்து, கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அரிசி மூட்டைகளைக் காப்பிக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கன்னியாகுமரியிலிருந்து உணவுப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close