Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னல் வேக டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்..! #GoogleTez

கூகுள்


ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு தேஸ்(Tez) என்றழைக்கப்படும் மொபைல் கட்டண அப்ளிகேஷனை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியில் 'தேஸ்' என்ற வார்த்தைக்கு ‘வேகம்’ எனப் பொருள். இது,ஆடியோ QR என அறியப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான, பாதுகாப்பான பண இடமாற்றங்களைச் செய்ய அனுமதிக்கிறது.
  
'தேஸ்' மனித செவிக்குப் புலப்படாமல் இருக்கும் அல்ட்ராசோனிக் அதிர்வெண்களைப் பயன்படுத்தி, இரு சாதனங்களுக்கு இடையே ஓர் இணைப்பை உருவாக்குகிறது. இதன் விளைவாக, வங்கிக் கணக்கு தகவல்கள் அல்லது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. இந்தச் சேவை, தேஸ் ஷீல்டால் (Tez Shield) பாதுகாக்கப்படுகிறது. இது,மோசடியான பயன்பாட்டைக் கண்டறிந்து, பயனர் அடையாளங்களைக் காக்கிறது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய அரசாங்கம் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. அதன்பின், பல நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான சேவைகளைத் தொடங்கின. இந்தியச் சந்தையில் இதற்கு கூகுள் மட்டுமே முயற்சிசெய்யவில்லை. வாட்ஸ்அப் நிறுவனம் முதல் பல நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. தற்போது, கூகுள் இந்தியச் சந்தையில், தேஸ் ஆப்-ஐ அதிகப் பேரிடம் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்தச் சேவை வெற்றியடைந்தால், இன்னும் பல நாடுகளுக்கு இதைக் கொண்டுசெல்லும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close