Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையின் பாதுகாப்பைப் பரிசோதிக்கும் சாகர் கவாஜ் ஆபரேஷன்!

சென்னையின் பாதுகாப்புகுறித்து முழு  சுயபரிசோதனை  செய்யும் சாகர் கவாஜ் (Sagar Kavach) ஆபரேஷன், இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது.

sagar
 

சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும் இந்த ஆபரேஷனில் இறங்கியுள்ளனர். கடலோரபாதுகாப்பை உறுதிசெய்ய,  தீவிரவாதிகள் போல வேடமிட்டு உள்ளே நுழையும் காவலர்களைப் பிடிக்கவேண்டும். அப்படிப் பிடிக்கத் தவறும் காவலர்களுக்கு remark வழங்கப்படும்.

sagar
 

வணிக வளாகங்கள் , திரையரங்குகள் போன்ற முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் நடைபெறும் சாகர் கவாஜ் ஆபரேஷன், நாளை மாலை 6 மணிவரை நடைபெறுகிறது . சென்னையில், இன்று காலை தொடங்கிய இந்த ஆபரேஷனில், தீவிரவாதிகள்போல வேடமிட்டு, கடற்கரை வழியாகச் சென்ற 8 போலீஸார் பிடிபட்டனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close