Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது!' - முதல்வருக்கு எதிராகச் சீறிய தினகரன்

 
நீட் தேர்வுக்கு எதிராக, நேற்று திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார்  டி.டி.வி.தினகரன். திருச்சி ஹோட்டலிலிருந்து கிளம்பிய தினகரன், முன்னதாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தைப் பணம் கொடுத்துக் கூட்டியதாகக் கூறுகிறார்கள். இது பணம் கொடுத்துக் கூட்டிய கூட்டமா இல்லை, உணர்வாகக் கூடிய கூட்டமா என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமே திரண்டிருக்கிறது. மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்களித்து, அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் 18 பேரை நீக்கிட, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, தான் எடுப்பதுதான் முடிவு என்று நினைக்கிறார். நீதிமன்றங்கள் உள்ளன என்பதை மறந்துவிட்டார். அவருக்குச் சட்டம் தெரியவில்லை. நிச்சயமாக நீதிமன்றம் மூலம் எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கத்தை வெல்வோம் என்றவர் அங்கிருந்து கிளம்பினார். 
 
அடுத்து, விமான நிலையத்தில் பேட்டியளித்த தினகரன், எடப்பாடி பழனிசாமி புனித நீராடுவதாகக் கூறுகிறார்கள். துரோகிகள் எல்லாம் புனித நீராடுவதால், அவர்கள் புனிதமடைய முடியாது. துரோகத்தைப் போக்க எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது; பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும். தமிழ்நாட்டில், மத்திய அரசு நடந்துகொள்ளும் விதம், இந்தியா முழுவதும் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close