Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

12-ம் வகுப்பு மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர் - ராஜஸ்தான் அவலம்

ராஜஸ்தானில் சிகார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அப்பள்ளியின் முதல்வரும் ஆசிரியரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ்க்கு வந்த மாணவியை மிரட்டி இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்ததைத் தொடர்ந்து மாணவியை ஷாக்புராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

child abuse
 

இதனால் மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதன் பின்னரே, மாணவியின் பெற்றோருக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். தற்போது பள்ளியின் முதல்வரும் அந்த ஆசிரியரும் தலைமறைவாகிவிட்டனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close