Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவக் கல்லூரி இயக்குநர் நியமனம் : நீதிமன்றம் உத்தரவு

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்துக்கு உரிய தகுதி உள்ள டாக்டர் எஸ்.ரேவதி கயிலைராஜனை நியமிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்தவர் மருத்துவர் ரேவதி கயிலைராஜன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக உள்ளார். இந்நிலையில் இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், "மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்துக்கு வேலை செய்யும் சீனியாரிட்டி அடிப்படையிலும், குறிப்பிட்ட கால அளவு டீ னாகவும் பணியாற்றியிருக்க  வேண்டும். இதுபோன்ற குறிப்பிட்ட விதிகளுக்குப் புறம்பாக, தமக்கு வேண்டியவர்களை நியமிக்கும் வகையில் விதிகளைத் தளர்வு செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது என்னைவிட பணி மூப்பு குறைவான டாக்டர் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது விதிக்கு முற்றிலும் மாறானது. எனவே, பணி மூப்பு மற்றும் டீனாகப் பணி புரிந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் என்னை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது .

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்துக்கு உரிய தகுதி உள்ள டாக்டர் எஸ்.ரேவதி கயிலைராஜனை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close