Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல நடிகர்கள்... வெவ்வேறு கதைகள்...11 படங்கள்... ஒரே நாளில் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

தமிழ் சினிமா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு இணையான காட்சிகளும் தமிழ் சினிமாவில் வைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் வருடத்துக்கே ஒரு குறிப்பிட்ட அளவுடைய படங்கள்தான் வெளிவரும். அதனாலேயே ஹிட் அடித்த படங்கள் மாதக்கணக்கில் திரையரங்கில் ஓடும். பிறகு, காலப்போக்கில் சினிமா மோகம் அதிகரித்து பல நடிகர்களும் இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். பின், மாதம் 20 படங்கள் வரை எனத் திரைக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் பல படங்கள் வெளிவர ஆரம்பித்து திரைத்துறையை ஆட்டுவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் ஆயுத பூஜையையொட்டி விஜய் சேதுபதியின் 'கருப்பன்', நயன்தாராவின் 'அறம்', மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்', கெளதம் கார்த்திக் நடிக்கும் 'ஹர ஹர மகாதேவகி' படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. 
                                           படங்கள்

 இதைத் தொடர்ந்து நாளை மறுநாளே ராணா நடிக்கும் 'நானே ராஜு நானே மந்திரி' எனும் தெலுங்கு படத்தின் டப் ‘நான் ஆணையிட்டால்’, ‘தெருநாய்கள்’, அனுஹாசன் நடித்துள்ள ‘வல்லதேசம்’, சரண் இயக்கத்தில் வினய் நடித்துள்ள ‘ஆயிரத்தில் இருவர்’, இனிகோ பிரபாகர் நடித்திருக்கும் ‘பிச்சுவாகத்தி’, ‘களவுத் தொழிற்சாலை’, கோகுல் நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’, ‘பயமா இருக்கு’, ‘நெறி’, ‘காக்கா’ ஓவியா மலையாளத்தில் நடித்து தமிழில் ‘டப்’ செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் ராஜ்ஜியம்’ ஆகிய 11 படங்கள் திரையில் வெளிவரவிருக்கின்றன. இது தவிர, ஏற்கெனவே முன்னணி நடிகர்களின் படம் திரையில் ஓடிக்கொண்டிருப்பதால் நாளை மறுநாள் வெளியாகும் படங்களுக்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கும் என்பது சவாலாக உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close