Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு-தம்பதியர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருப்பூரில், போலி ஆவணங்களைக் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கில், தம்பதியர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய ஐந்து பேரை தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றுகூறி, கியூ பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களில், ரூபேஷ் மற்றும் சைனா இருவரும் தம்பதியர். இவர்கள் திருப்பூரில் வசித்தபோது, போலி ஆவணங்களைக் கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார் ஒன்றில், திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு, நேற்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எனவே, வழக்கில் ஆஜராக சம்பந்தப்பட்ட ரூபேஷ் மற்றும் சைனா இருவரையும் கோவை மத்தியச் சிறையிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தனர். நீதிபதி முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், வழக்கின் விசாரணையை அக்டோபர் 20-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close