Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு; ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில, இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது.

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலைசெய்துகொண்டார். அதன் பின்னர் தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தின. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ’மத்திய அரசு, மாநில அரசுக்குப் போதிய அதிகாரங்கள் வழங்காதது மட்டுமல்லாமல் மாநில அரசிடம் இருக்கும் சில அதிகாரங்களையும் பறிக்க நினைப்பதாகக் கூறியது. மேலும், அதிகார குவிப்புமூலம் கூட்டாட்சிக்கு வேட்டுவைப்பதாகவும் குற்றம் சாட்டியது.

 சென்னையில் இன்று, மாநில சுயாட்சி மாநாடு திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

படங்கள்: வீ. நாகமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close