Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல்ஹாசனைச் சந்திக்கும் இரு மாநில முதல்வர்கள்!

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர், நடிகர் கமல்ஹாசனை இன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ட்விட்டர் கருத்துகள்மூலம் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த கமல்ஹாசன், சமீபகாலமாக மேடைகளிலும் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். இதனால், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்குறித்தும் பல்வேறு ஊகங்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இந்தநிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேச இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் கேரளா சென்ற கமல்ஹாசன், முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசியிருந்தார். தமிழகத்தில், ஆளும் கட்சியையும் அரசின் ஊழலையும் கமல் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், இரண்டு மாநில முதலமைச்சர்கள் அவரை சந்தித்துப் பேச இருப்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close