Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

14 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி வழக்கு: முன் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 4.25 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்று மோசடிசெய்ததாகப் புகார் எழுந்தது. அதேபோல, செந்தில் பாலாஜி ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக, போக்குவரத்துத் துறை உதவி மேலாளரும் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது 14 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.95 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

இந்தப் புகாரின் அடிப்டையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கும்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஏற்கெனவே தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தகவல், தினகரன் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close