Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவின் முதல் பெண் டி.ஜி.பி!

கேரளாவின் முதல் பெண் டி.ஜி.பி-யாக, சிறைச்சாலை இயக்குநர் ஶ்ரீலேகா பதவி ஏற்கவிருக்கிறார். சிறிய மாநிலமான கேரளாவில், தற்போது 12 டி.ஜி.பி-கள் பதவி ஏற்க உள்ளனர். இந்த 12 டி.ஜி.பி-களில், ஒரு பெண் டி.ஜி.பி-யும் பதவியேற்க இருக்கிறார். இவர்களின் டி.ஜி.பி ரேங்க் பட்டியலைப் பொறுத்து, இவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

ஶ்ரீலேகா

சிறைத்துறை இயக்குநர் ஶ்ரீலேகா, கேரளாவின் முதல் டி.ஜி.பி-யாக பதவியேற்க இருக்கிறார். இவர், காவல்துறையில் 30 வருஷம் சேவை முடித்துள்ளார். இதனால், பதவி உயர்வுக்குழு இவரைப் பரிந்துரை செய்துள்ளது. இவர் பதவிக்கு வந்தவுடன் சட்டம், ஒழுங்கு அதிகாரியாகப் பதவி ஏற்பார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர், ஊழலுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவரின் கணவர், குழந்தைகள் அறுவைசிகிச்சை மருத்துவராவார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

 இவர், கேரளாவின் முதல் பெண் டி.ஜி.பி என்கிற சிறப்பைப் பெறுகிறார். மிகச் சிறப்பாகக் காவல்துறையில் சேவைசெய்தவர் என்ற அடிப்படையிலேயே இந்தப் பதவிஉயர்வு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close