Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசைப்படகு மீனவர்கள்!

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களுக்கான தங்குகடல் அனுமதிக்கு மீன்வளத்துறை போட்டுள்ள தடை உத்தரவைக் கண்டித்து  விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

விசைப்படகு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 243 விசைப்படகுகள் உள்ளன. கடந்த சிலமாதங்கவே மீன்பாடு இல்லாததாலும் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள் மீன்பிடித்துவிட்டு கரைதிரும்பிவிட வேண்டுமென்ற மீன்வளத்துறையின் விதிமுறையாலும் இந்த நேரத்துக்குள் பிடித்து வரப்படும் மீன்களின் விற்பனையால் டீசல் மற்றும் மீனவர்கள் ஊதியத்துக்கே சரியாகிவிடுவதால் தங்குகடல் அனுமதி கேட்டு கடந்த 16-ம் தேதி விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். விசைப்படகு மீனவர்களுக்கு தங்குகடல் அனுமதி கொடுத்தால் தங்களது மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்குத் தங்குகடல் அனுமதி வழங்கக் கூடாது என நாட்டுப்படகு மீனவர்கள் 3 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி தங்குகடலுக்குச் சென்று வந்த 166 விசைப்படகுகள் ஒரு மாதம் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லக் கூடாது என நேற்று மீன்வளத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தங்களுக்குத் தங்குகடல் அனுமதி வேண்டும் எனக்கோரி விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் என சுமார் 1,000 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்

இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக அனைத்து கூட்டமைப்பினரிடம் பேசினோம், ‘‘தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் தூத்துக்குடி தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் இரவு நேரங்களில் கடலில் தங்கி மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதியளித்துள்ளது. ஆனால், தூத்துக்குடி விசைப்படகுகளுக்கு மட்டும் 1983-ம் ஆண்டு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை வைத்து தங்குகடலுக்கு அனுமதி மறுக்கிறது. கேரளா, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தைத் தங்கு தளமாகக்கொண்ட விசைப்படகுகள் எங்களது மீன்பிடி பகுதியான தூத்துக்குடி கடல் பகுதியில் இரவு பகலாகத் தொடர்ந்து மீன்பிடித்து வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை நேரடியாகவும் மனு மூலமாகவும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. அதிக குதிரைதிறன் கொண்ட நவீன இயந்திரங்களையும் அதிநவீன கருவிகளையும் அதிக நீளமுள்ள நாட்டுப்படகில் பொருத்தி விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்யும் கடல்பகுதியில் வந்து மீன்பிடிப்பதால் விசைப்படகு மீனவர்களுக்குத்தான் இடையூறு ஏற்படுகிறது. எங்களால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு எந்த இடையூறுமில்லை. மற்ற பகுதிகளில் தங்குகடல் அனுமதி உள்ளபோது எங்களுக்கும் தங்குகடலுக்கு அனுமதி வேண்டும்’’ என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close