Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பழனிசாமி ஆட்சித் தொடர நாகூரில் சிறப்புத் தொழுகை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சித் தொடரவும் தினகரனால் ஏற்படும் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாகூரில் உள்ள தர்காவில் சிறப்புத் தொழுகையை எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், நடிகர் விஜய்கார்த்திக் ஆகியோர் நடத்தியுள்ளனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகப்பட்டினத்தில் நடந்தது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்பட கட்சியினர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், நடிகர் விஜய்கார்த்திக் என்ற ஜெ.எம்.பஷீர், காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம் உள்பட கட்சியினர் நாகூர் தர்காவுக்குச் சென்றனர். அங்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாகூர் தர்காவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்துள்ளது.

சிறப்புத் தொழுகை குறித்து பழனிசாமி ஆதரவாளரான நடிகர் விஜய்கார்த்திக் கூறுகையில், "தினகரனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுவருகிறது. ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் தரப்பினர் முயற்சி செய்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர நாகூர் தர்காவில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், நேரமில்லாத காரணத்தால் அவர் வரவில்லை. நாகூர் தர்காவுக்கு ஜெயலலிதா, பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். இந்த தர்காவில் தொழுகை செய்தால் அது, நிச்சயம் நிறைவேறும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close