Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கமல் அரசியலுக்கு வர வேண்டும்' - கெஜ்ரிவால் அழைப்பு

Chennai: 

கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

கமல்ஹாசன் - கெஜ்ரிவால்

ஊழலுக்கு எதிராக நீண்ட நாள்களாகக் குரல்கொடுத்து வருபவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசு ஊழியராக இருந்த கெஜ்ரிவால், பின்னர், அன்னா ஹசாரே உடன் ஊழலுக்கு எதிராகப் போராடினார். இதையடுத்து, நேரடி அரசியலில் களமிறங்கி டெல்லி முதல்வரானார்.

இந்நிலையில், சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் - கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கமல்ஹாசன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், 'தனிப்பட்ட ரீதியாகவும் நடிகராகவும் நான் கமல்ஹசானின் ரசிகன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கமல்ஹாசனும் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகிறார். அதனால் அவரைச் சந்தித்தேன். நாடு ஊழலாலும் மதவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close