Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் தமிழக- கேரள எல்லையில் கைது!

மாவோயிஸ்ட் காளிதாஸ்

தமிழக- கேரள எல்லைப் பகுதியான அகளியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபர் காளிதாஸ் என்பவர் கேரளக்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

"தமிழக, கேரள, கர்நாடக எல்லைகள் சந்திக்கக்கூடிய இடத்தில் மாவோயிஸ்டுகள் தங்கள் இயக்கத்தைப் பலப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கடந்த ஆண்டு கிடைத்த தகவலின் பேரில், மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்த கேரளக் காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்தத் தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக, கேரள வனப் பகுதியான கேரள மாநிலத்தில் உள்ள  நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்போது சிலர் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து மாவோயிஸ்ட் மற்றும் காவல்துறை இரு தரப்பினரிடையேயான மோதல்கள் அவ்வப்போது நடந்து வந்தன. இந்நிலையில், இன்று தமிழக -கேரள எல்லையான ஆனைகட்டியை அடுத்த கேரள மாநிலம் அகளி வனப்பகுதியில் மவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரைக் கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காளிதாஸ் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்றும், இவர் கடந்த 2015-ல் கேரள வனத்துறை அலுவலகம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமானவர் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து காளிதாஸிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close