Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவில்பட்டியில் நர்ஸ் தற்கொலை.. டாக்டரின் பாலியல் தொந்தரவுதான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் தாட்சாயிணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு அவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனையின் டாக்டர் காந்திராஜன்தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

kovilpatti pathma praba hospital

கோவில்பட்டியைச் சேர்ந்த தாட்சாயிணி என்ற அம்மு, முத்தானந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வருடமாக  நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே குழப்பமான மனநிலையில் காணப்பட்டவர்  நேற்று  இரவில் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் இருந்தாராம். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி இருந்ததும் தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துமனைக்கே அவரது அம்மாவும், அக்காவும் அவரைக் கொண்டு சென்றுள்ளனர். ‘’இங்க பார்க்க முடியாது. ஜி.எச்.க்கு கொண்டு போங்க’’ என மருத்துவமனைக்குள்ளேயே விடாமலும் உடன் வேலைபார்க்கும் பெண் என்றுகூட பார்க்காமல் மனசாட்சி இல்லாமல் ஊழியர்கள் பேசி அனுப்ப..,  கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.‘’டாக்டர் இல்ல.. பாளையங்கோட்டை ஜி.எச்.க்கு கொண்டு போங்க..’’என முதலுதவி மட்டும் செய்து அனுப்பி விட,  பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார் நர்ஸ் தாட்சாயிணி. இந்தத் தற்கொலை செய்தியே இன்றுதான் பரவலாகப் பரவத் தொடங்கியுள்ளது.

nurse thatchayini’’தாட்சாயிணி பணிபுரிந்து வந்த ஆஸ்பத்திரியோட டாக்டர் காந்திராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால்தான் இந்தப் பொண்ணு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன் 4 நர்ஸ்கள் இப்படி தற்கொலை செய்து கொண்டனர்.  விஷம் குடிச்சு ஒருவர் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கும் போது காப்பத்த வேண்டியது டாக்டரோட கடமை. அதுவும் 2 வருசமா அதே ஆஸ்பத்திரியில வேலை பார்த்த ஒரு நர்ஸை விஷம் குடிச்ச நிலைமையில  தூக்கிட்டு வந்திருக்கும்போது இங்க பார்க்க முடியாதுன்னு சொல்லி துரத்தி அனுப்பிய காரணம் என்ன? மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை அந்தஸ்துல இருக்குற கோவில்பட்டி மருத்துவமனையில ஒரு பாய்சன் கேஸைக் கூட காப்பாத்த முடியலையா? ஒரு டாக்டர்கூட டூட்டியில இல்லையா.., இல்ல காந்திராஜனைக் காப்பாத்தி விடுறதுக்காக வேணும்னே டாக்டர் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாங்களா. ? ’’ என அவரது உறவினர்கள் கொந்தளிப்பில்  சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.    

இந்த டாக்டர் காந்திராஜ் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர்.ராஜுவின் உறவினர் எனவும் சொல்கிறார்கள். திட்டமிட்டுதான் கோவில்பட்டியில் நர்ஸ் தாட்சாயிணிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது என்பது போலத் தெரிகிறது. போலீஸாரின் விசாரணையில்தான் முழு உண்மை தெரியவரும்.   

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close