Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மற்றும் திருநெல்வேலி  மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கிடையே கடலில் மீன்பிடிக்கும்போது எழும் பிரச்னை தொடர்பாக, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சேரன்மகாதேவி உதவி கலெக்டர்  தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்குறித்த அறிக்கையை குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில். "சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தைத் தங்குதளமாகக்கொண்டு தொழில் புரியும் விசைப்படகுகள், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ல் தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல, தினமும் அதிகாலை 5 மணிக்குக் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்று, இரவு 9 மணிக்குள் சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்குத் திரும்ப வேண்டும்.

மீனவர்கள், எக்காரணம் கொண்டும் கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது. உத்தரவுக்கு மாறாக தங்கு மீன்பிடித் தொழில் புரியும்  விசைப்படகு மீனவர்கள்மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி அபராதம், தொழில் முடக்கம், மற்றும் படகுப் பதிவு ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனச் செய்திக் குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close