Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகா கடுமையாக எதிர்க்கிறது: சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியத்தை கர்நாடகா கடுமையாக எதிர்ப்பதாக, மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 


காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக, கடந்த 2013-ம் ஆண்டிலேயே அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மைசூர் தசரா தொடக்க விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ‘காவிரி வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மேலாண்மை வாரியம் அமைப்பதுகுறித்து கருத்து மட்டுமே தெரிவித்துள்ளனர். உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதைத் தொடக்கம் முதலே கர்நாடகா எதிர்த்து வந்திருக்கிறது. இதுதொடர்பாக நமது வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளேன். நம் தரப்பு வாதங்களை உறுதியாக எடுத்துரைக்கவும், நமது விவசாயிகள் பாதிக்கப்படாததை உறுதிசெய்யவும் அவர்களிடம் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, காவிரி வழக்கு தொடர்பாக விவசாயிகள் கவலைகொள்ள வேண்டாம்’ என்று பேசினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close