Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் இன்று!

மிழகத்தில், திராவிட அரசுகள் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்களோ இல்லையோ... தன் உழைப்பால், தமிழகம் இந்தியாவிலேயே தலைநிமிர்ந்து நின்ற மாநிலம்.  கல்வி, பொருளாதாரம், சாலைப் போக்குவரத்து, பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பொருளாதாரம், நகர்ப்புற மேம்பாடு, கிராமங்கள் முன்னேற்றத்தில் வட இந்திய மாநிலங்களைவிட பன் மடங்கு முன்னேறிய மாநிலம்.   கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதல்வராக இருந்த வரை, ஏதாவது ஒரு வகையில் மத்திய அரசை தங்கள் பிடியில் வைத்திருப்பார்கள். 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத் தினம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவ்வளவு எளிதில் மத்திய அரசுக்குப் பணிந்து போகமாட்டார். மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தைக்  கொண்டுவந்தாலும் ஜெயலலிதாவை அனுசரித்தே நடந்துகொள்ளும். தமிழகத்தின் தற்போதையை தலையாய பிரச்னை, நீட் தேர்வு முறை. முதல்வராக ஜெயலலிதா இருந்த வரை, நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தார். ஒருவேளை , அவர் உயிருடன் இருந்திருந்தால்,  நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு வருட காலம்  விதிவிலக்கு வாங்கித் தந்திருப்பார்.

ஜெயலலிதா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரின் ஆட்சிக் காலத்தில் ரவுடிகளைத் தலையெடுக்க விட்டதில்லை. என்கவுன்டர்களுக்கும் தயங்கியதில்லை. சட்டம்- ஒழுங்குக்கு, தமிழகத்தை உதாரணமாகச் சொல்வார்கள். தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி அரசுகூட ஜெயலலிதா என்ற ஆளுமையை அவ்வளவு எளிதில் எதிர்கொண்டுவிட முடியாது. அத்தகைய இரும்பு மனுஷி , கடந்த ஆண்டு இதே நாளில்தான்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகமும் கோமாவில் விழுந்தது.  குழப்பங்களும் கூச்சல்களும் அரசியல் நிலையற்றதன்மையும் செயலற்ற அரசால் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும்விட, தமிழகம் இப்போது மத்திய அரசுக்கு வரிந்துகட்டிக் கொண்டு சேவை செய்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு மத்திய அரசின் தலையீடு இப்போது தமிழகத்தில் இருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close