Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடியின் திட்டத்துக்கு ரஜினி ஆதரவு!

பிரதமர் மோடியின் தூய்மையே சேவை இயக்கத்துக்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். 


கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரான நரேந்திர மோடி, நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தூய்மையே சேவை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது. தூய்மையே சேவை பிரசார இயக்கத்தில் இணைந்து செயலாற்றுமாறு பல்வேறு துறை பிரபலங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார். இந்த இயக்கத்தின் தூதுவர்களாக இணைந்து செயல்பட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், அனுஷ்கா ஷர்மா, நீடா அம்பானி ஆகியோர் முன் வந்துள்ளனர். 

இந்தநிலையில், தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர். ‘நமது பிரதமரால் தொடங்கப்பட்டுள்ள தூய்மையே சேவை இயக்கத்துக்கு நான் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையே கடவுளுக்கு நிகரானது’ என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் திட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close