Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தினகரன் சொன்ன ஒரு வார்த்தையால் கொந்தளித்தேன்'- பழனிசாமியைச் சந்தித்த வசந்தி முருகேசன் பேட்டி

டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலகியது ஏன் என்பதுகுறித்து தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் விளக்கமளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரான வசந்தி, அ.தி.மு.க-வின் நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்துவந்த இவர், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதோடு, அவர்களது அணியில் இணைந்துகொண்டார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தி முருகேசன், "மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்து, இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றார் ஜெயலலிதா. ஒன்றரைக்கோடி தொண்டர்களைக்கொண்ட இயக்கம் அ.தி.மு.க. ஜெயலலிதா சொன்னது என்னவென்றால், எனக்குப் பின்னாலும், எத்தனை நூற்றாண்டு காலம் ஆனாலும் இந்தக் கழகத்தை யாரும் அழித்துவிட முடியாது என்றார். அதேபோலத்தான், இந்தக் கழகம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்களுக்காக இயங்கும். ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற, முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உறுதுணையாக இருப்பார்கள். மக்களுக்கான நலத்திட்டங்களை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். அவர்களுடன் இணைந்து நானும் பணியாற்றுவேன்" என்று கூறினார்.

முதல்வர் பழனிசாமி அணிக்கு நீங்கள் வரக் காரணம் என்ன?

''காரணம் என்னவென்றால், 'தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு இந்த ஆட்சியை அழித்துவிடுவேன்' என்று தினகரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?''

அப்படி அவர் சொல்லவேயில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது...

''தினகரன் அப்படி சொல்லவேயில்லையா... அப்படித்தான் அவர் சென்னார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தையால்தான் ஒன்றரைக்கோடி தொண்டர்களும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். தன் நலனையும் பொருட்படுத்தாமல், மக்கள் நலன்தான் பெரிது என்று கருதிக்கொண்டு பணியாற்றியவர் ஜெயலலிதா. இந்த ஆட்சியை எப்படி அழித்துவிட முடியும்; எப்படிக் கலைத்துவிட முடியும்? முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.''

தினகரனிடம் இருக்கும் வேறு எம்.பி-க்கள் பழனிசாமி அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா?

''வாய்ப்புகள் இருக்கிறது. விரைவில் அவர்கள் வருவார்கள்.''

18 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

''எம்.எல்.ஏ-க்களை தனியாக அடைத்துவைத்திருந்தார்கள். வாக்களித்த மக்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்... தனி அறையில் இருப்பதா நியாயம்... மக்களுக்காக அவர்கள் பணியாற்ற வேண்டுமல்லவா.''

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்களா, விருப்பத்துடன் இருக்கிறார்களா?

''அவர்கள் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.''

உங்களுக்கு மிரட்டல் வந்ததா? அதனால்தான் பழனிசாமி அணியுடன் இணைகிறீர்களா?

''எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும். ஆட்சியை யாரும் கலைக்கக் கூடாது.''

இத்தனை காலம் தினகரனுடன் இருந்தபோது இந்த ஆட்சியைக் கலைக்கக் கூடாது என்று உங்களுக்குத் தெரியவில்லை?

''இப்போதுதான் சொல்கிறார்கள் ஆட்சியைக் கலைப்போமென்று. இது எங்களுக்குப் பிடிக்கவில்லை.''

பழனிசாமி அணியுடன் இணைவதுகுறித்து உங்கள் தொகுதி மக்களிடம் கேட்டீர்களா?

''எங்கள் தொகுதி மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். முதல்வரும் துணை முதல்வரும் மக்கள் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களுடைய கருத்து என்னவென்றால், இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான்.''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close