Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியர்கள் கைது!

அரசு ஊழியர்கள் போராட்டம் நடந்தபோது, நீதிமன்றத்தையும் நீதிபதியையும் தரக்குறைவாகப் பேசிய அரசு ஊழியர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இதேபோல், சென்னையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுபாஷ்சந்திர போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். பழைய  ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், அதில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்துப் பேசினார்கள். அத்துடன், ஒரு சிலர் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சனம் செய்தனர். அப்படி நீதிபதிகளை விமர்சித்துப் பேசியவர்கள்மீது தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, கடந்த 14-ம் தேதி பாளையங்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசுப் பணிமனை ஊழியரான முருகன் என்பவர் கடுமையாகப் பேசினார். 

அவரது பேச்சு நீதிபதிகளை விமர்சிப்பதாக இருந்ததால், அவர்மீது இன்று பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 500, 188, 505 (1) ஏ, 504 ஆகியவற்றின் அடிப்படையில், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முருகனைக் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பை சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுபாஷ்சந்திர போஸ் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close