Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான தடை நீக்கம்..! நாளை தேர்வு நடைபெறும்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேஷ்கண்ணா மற்றும்  குமார் ஆகிய நபர்கள் அளித்த மனுவில், "கடந்த ஜூன் 26-ம் தேதி உடற்கல்வி ஓவியம், இசை, தையல் பயிற்சி போன்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டது. 

இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தகுதியில் மத்திய அரசின் என்.சி.டி.இ 2-வது அட்டவணை  விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை மாறாக பொதுவான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளுக்கும் வெவ்வேறு தகுதிகளை என்.சி.டி.இ 2001 விதிப்படி நிர்ணயித்துள்ளது. எனவே, இந்த விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறாவிட்டால் மத்திய அரசின் விதிமுறையை மீறியதாக அமையும். எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுவான தகுதியை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் என்.சி.டி.இ விதி 2001-ன் படி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, நாளை நடைபெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தும், பள்ளி கல்வித்துறை தேர்வாணையத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணை ஒத்திவைத்தார். இதனையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மற்றொரு அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த அமர்வில், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து அறிவிக்கப்பட்டப்படி நாளை நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close